பாகிஸ்தானுடன் இந்தியா பொருதுவது கேள்விக்குறி

புதுடெல்லி: இங்கிலாந்தில் வரும் மே மாத இறுதியில் தொடங்க உள்ள ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ் தானுடன் இந்திய அணி விளை யாடுமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வட்டாரங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் இம்மாதம் 14ஆம் தேதி இந்திய துணை ராணுவப் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதி தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவியுள்ளதாக இந்தியா குற்றஞ்சாட்டிவரும் நிலையில், அதை பாகிஸ்தான் பகிரங்கமாக மறுத்துள்ளது.

ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் பதற்றம் காரணமாக இரு நாட்டு அணிகளும் கிரிக்கெட் போட்டி களில் பங்கேற்காமல் உள்ளன. இந்நிலையில், புல்வாமா தாக் குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளும் உலகக் கிண்ணப் போட்டியில் விளை யாடுமா என்பது பெரிய கேள்வி யாக உள்ளது. இந்தியாவில் உள்ள  முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் நிர்வாகிகளும் உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.
ஐசிசி அறிவித்துள்ள உலகக் கிண்ணப் அட்டவணையில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, எந்தவிதமான மாற்றமும் அட்டவணையில் செய்யப்படாது என ஐசிசி திட்ட வட்டமாக அறிவித்துவிட்டது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பந்தைப் பிடித்து விக்கெட்டைக் கைப்பற்ற முயற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர் முகம்மது அமீரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் டேவிட் மில்லர். படம்: ஏஎஃப்பி

25 Jun 2019

தென்னாப்பிரிக்க அணியின் பயணம் முடிந்தது

அர்ஜெண்டினாவின் இரண்டாவது கோலைப் போடும் செர்ஜியோ அகுவேரோ (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

25 Jun 2019

கத்தாரைச் சாய்த்த அர்ஜெண்டினா

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி

24 Jun 2019

விராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்