லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று அந்நாட்டு முன்னாள் அணித் தலைவர் அலெஸ்டர் குக் (படம்) தெரிவித்துள்ளார். "இங்கிலாந்து அணி தற்போது ஒருநாள் போட்டியில் மிகவும் அபாரமாக ஆடிவருகிறது. அணி யில் உள்ள 15 வீரர்களும் மிகச் சிறந்த வகையில் ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். "ஒவ்வொருவரது பங்க ளிப்பும் நன்றாக இருக்கிறது. இதனால் இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்பு உள்ளது," என்றார் அவர். இங்கிலாந்து அணி இது வரை உலகக் கிண்ணத்தை வென்றது கிடையாது. 1939, 1987, 1992ஆம் ஆண்டு களில் அந்த அணி இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியுற்று இருந்தது.2019-02-21 06:00:00 +0800
'உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து வெல்லும்'
1 mins read

