மனந்தளராமல் போராடி வெற்றியைப் பறித்த சிட்டி

கெல்சென்கிர்சென்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்கான காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி வாகை சூடியுள்ளது.
ஜெர்மனியின் ஷால்க 04 குழுவை அது 3=2 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.
இந்த ஆட்டம் நேற்று அதிகாலை ஜெர்மனியில் நடை பெற்றது.
எதிரணியின் விளையாட்டரங் கத்தில் மூன்று கோல்கள் போட்ட சாதக நிலை சிட்டியின் காலிறுதி வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது.
ஆனால் சிட்டிக்குக் கிடைத்த இந்த வெற்றி சுலபமாக வர வில்லை. 
ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் ஷால்க லோகாப்பாளர் செய்த பிழையைப் பயன்படுத்தி சிட்டி கோல் போட்டது.
செர்ஜியோ அகுவேரோ  அனுப்பிய பந்து வலையைத் தொட்டதும் சிட்டி ஆட்டத்தை எளிதில் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சில நிமிடங்களில் நிலைமை மாறியது.
ஆட்டத்தின் 38வது நிமிடத் தில் பெனால்டி எல்லைக்குள் இருந்த சிட்டியின் தற்காப்பு ஆட்டக்காரருடைய கையில் பந்து பட்டதாக ஷால்க வீரர்கள் குரல் எழுப்பினர்.
காணொளிப் பதிவை ஆராய்ந்த நடுவர், ஷால்க வீரர்களின் கோரிக்கைக்கு இணங்கி பெனால்டி வாய்ப்பை வழங்கினார்.
பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் ஷால்க குழுவின் அல்ஜீரிய நாட்டு நட்சத்திரம் பென்தலீப்.
ஏழு நிமிடங்கள் கழித்து, ஷால்க குழுவுக்கு மீண்டும்  பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இம்முறை ஷால்க குழுவின் சலிஃப் சானேவை சிட்டியின் ஃபெர்டினாண்ட் பெனால்டி எல்லைக்குள் விழச் செய்ததால் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஷால்கவுக்குக் கிடைத்த இந்த இரண்டாவது பெனால்டி வாய்ப்பையும் பென்தலீப் எடுத்தார்.
பந்தை வலைக்குள் சேர்த்து தமது குழுவை அவர் முன்னி லைக்குக் கொண்டு சென்றார். 
இடைவேளையின்போது 2-1 எனும் கோல் கணக்கில் ஷால்க முன்னிலை வகித்தது.