யூரோப்பா லீக்: பிரெஞ்சுக் குழுவுடன் மோதும் ஆர்சனல்

லண்டன்: யூரோப்பா லீக் காற் பந்தின் காலிறுதிக்கு முந்திய சுற்றில் ஆர்சனல் குழு, பிரான்சின் ரென் குழுவுடன் மோதவிருக்கிறது.
அதேபோல், அந்தச் சுற்றுக்கு முன்னேறிய இன்னோர் இங்கிலிஷ் குழுவான செல்சி, உக்ரேனின் டைனமோ கியவ் குழுவுடன் பலப் பரிட்சை நடத்தவுள்ளது.
பெலருசின் போரிசவ் குழு விற்கு எதிரான ‘ரவுண்ட் ஆஃப் 32’ சுற்றின் முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றுப்போன ஆர்சனல், நேற்று அதிகாலை நடந்த 2வது ஆட்டத் தில் 3-0 என அக்குழுவைப் பழிதீர்த்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதிசெய்தது.
சுவீடனின் மால்மோ குழுவிற்கு எதிரான முதல் ஆட்டத்தில் 2-1 என வென்றிருந்த செல்சி, நேற்றும் 3-0 என வென்று தனது வலிமை யைப் பறைசாற்றியது. 
காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட்டங்கள் மார்ச் 7ஆம் தேதியும் 14ஆம் தேதியும் நடைபெறும்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

'சி' பிரிவு ஆட்டத்தின்போது சிலியின் ஜோஸ் ஃபுவென்ஸாலிடா வும் (இடது) ஜப்பானின் டைகி சுகியோகாவும் இப்படி மோதிக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி 

19 Jun 2019

ஜப்பான் வீரர்களைத் திணறடித்த சிலி

'சி' பிரிவு ஆட்டத்தின்போது சிலியின் ஜோஸ் ஃபுவென்ஸாலிடா வும் (இடது) ஜப்பானின் டைகி சுகியோகாவும் இப்படி மோதிக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி

19 Jun 2019

அரை இறுதியை நோக்கி முன்னேறும் பங்ளாதேஷ்