லிவர்பூல் நிர்வாகிக்கு அபராதம்

லிவர்பூல்: கள நடுவரின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பும் வகை யில் கருத்துரைத்த லிவர்பூல் காற்பந்துக் குழு நிர்வாகி யர்கன் கிளோப்பிற்கு இங்கிலிஷ் காற் பந்துச் சங்கம் (எஃப்ஏ) 45,000 (S$79,350) பவுண்டு அபராதம் விதித்துள்ளது. 
இம்மாதத் தொடக்கத்தில் லிவர்பூல்-வெஸ்ட் ஹேம் யுனை டெட் குழுக்கள் பொருதிய இங் கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இந்த ஆட்டத்தில், லிவர்பூல் ஆட்டக்காரர் சாடியோ மானே கோலடித்தபோது சக வீரர் ஜேம்ஸ் மில்னர் ‘ஆஃப்சைட்’ நிலையில் இருந்து அடித்ததாகச் சொல்லப்பட்டது. இதனால் வெஸ்ட் ஹேம் குழுவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
இந்நிலையில்,‘ஆஃப்சைட்’ கோல் பற்றி கள நடுவர் கெவின் ஃபிரண்டுக்குத் தெரிந்திருந்தும் அதை அவர் அனுமதித்துவிட்டார் என்று போட்டி முடிந்தபின் கிளோப் கூறியிருந்தார். 
இது பற்றி விசாரித்த எஃப்ஏ, ‘நடுவர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டார் எனக் குறிப் பிடும் வகையில் கிளோப்பின் கருத்து அமைந்திருந்ததாக” தெரிவித்தது.
 

Loading...
Load next