கிரிக்கெட்டில் இருந்து பாகிஸ்தானை ஒதுக்கி வைக்க இந்தியா வலியுறுத்து

புதுடெல்லி: அனைத்துலக கிரிக் கெட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தானை அனுமதிக்கக் கூடாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அனைத்துலக கிரிக்கெட் மன்றத் திடம் (ஐசிசி) வலியுறுத்தவுள்ளது.
அண்மையில் காஷ்மீர் மாநிலத் தில் நிகழ்ந்த தற்கொலைத் தாக்கு தலில் இந்திய ராணுவத்தினர் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதச் சம்பவத்திற்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கும் தொடர்பு இருப்பதாக இந்தியா கூறி வருகிறது. இதை பாகிஸ்தான் மறுத்து வந்தாலும் அந்நாட்டை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மே மாத இறுதியில் இங்கி லாந்தில் தொடங்கவிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட் டிகளில் இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் விளையாடுவதா இல்லையா என் பதைத் தீர்மானிக்க வினோத் ராய் தலைமையிலான மூவர் ஆட்சிக் குழு நேற்று கூடி விவாதித்தது.

கூட்டத்திற்குப் பின் செய்தியா ளர்களிடம் பேசிய திரு வினோத் ராய், “இவ்விவகாரம் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேசி வருகிறோம். ஜூன் 16ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதற்கு இன்னும் அதிக காலம் இருக்கிறது.
“அதே நேரத்தில், ஐசிசியிடம் எங்களின் இரு முக்கிய அக்கறை களை முன்வைக்கவுள்ளோம். உலகக் கிண்ணத் தொடரின்போது வீரர்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் எனக் கோருவோம். அத்துடன், பயங்கர வாத மையமாகத் திகழும் நாட்டு டனான உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும் என கிரிக்கெட் விளையாடும் நாடுகளிடம் வலி யுறுத்துவோம்,” என்றார்.