புத்துயிர் பெற்ற யுனைடெட்; சாதிக்க துடிக்கும் லிவர்பூல்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் (இபிஎல்) இன்றிரவு நடை பெறும் விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் குழுக்கள் மோதுகின்றன.
எந்தவொரு இபிஎல் பருவத் திலும் இவ்விரு குழுக்களுக்கும் இடையிலான ஆட்டம் காற்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தும் ஒன்றாக அமையும்.
அதுவும் குறிப்பாக, இடைக்கால நிர்வாகி ஒலே குனார் சோல்சியா ரின் கீழ் மறுமலர்ச்சி அடைந்துள்ள யுனைடெட், அடுத்த பருவம் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதிபெற இபிஎல் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வர முனைப்பு காட்டி வருகிறது.
மற்றொருபுறம், பட்டியலில் முதலிடம் வகிக்கும் மான்செஸ்டர் சிட்டிக்கு நிகராக 65 புள்ளிகள் பெற்றிருந்தாலும் கோல் வித்தியா சத்தால் இரண்டாவது நிலையில் உள்ள லிவர்பூல், 1990ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக இபிஎல் கிண்ணத்தை வெல்லும் வேட்கையில் உள்ளது.
இதன் காரணமாக, சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 10.05 மணிக்கு யுனைடெட்டின் சொந்த மண்ணில் தொடங்கும் இந்த ஆட்டத்தில் இரு குழுக்களும் விட்டுக்கொடுக் காமல் விளையாடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
நடப்பு பருவத்தில் கடந்த டிசம்பரில் இவ்விரு குழுக்கள் பொருதிய ஆட்டத்தில் லிவர்பூல் 3-1 எனும் கோல் கணக்கில் யுனைடெட்டை வீழ்த்தியது.
ஆனால், அப்போது முன்னாள் நிர்வாகி ஜோசே மொரின்யோவின் கீழ் யுனைடெட் சரிவைக் கண்டு வந்தது.
அதன் பின்னர் யுனைடெட்டின் இடைக்கால நிர்வாகியாக சோல் சியார் பொறுப்பேற்றுக்கொண்டதை அடுத்து ஆதிக்க சக்தியாக அக்குழு உருமாறியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை எஃப்ஏ கிண்ணப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செல்சியை 2-0 எனும் கோல் கணக்கில் வென்ற யுனைடெட், லிவர்பூல் உடனான இந்த ஆட்டத் திற்குத் திடமான மனஉறுதியுடன் தயாராகி வருகிறது.
முறை மட்டுமே தோல்வியுற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!