பாகிஸ்தானுடன் மோதுவது தொடர்பாக அரசின் சொல்படி நடப்போம்: கோஹ்லி

விசாகப்பட்டினம்: இம்மாதம் 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர் கள் மரணம் அடைந்தனர். 
வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோத பட்டியல் வரையப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக் கும் பாகிஸ்தானைச் சேர்ந்த அணி யுடன் இந்திய அணி விளையாடக் கூடாது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குரல் எழுப்பி வரு கின்றனர்.
சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட வேறு சில இந்திய கிரிக்கெட் பிரபலங் களோ பாகிஸ்தானுடன் மோதி அந்த அணியை வீழ்த்தி வெளியேற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோத வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்க நடத்தப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் உரிய நேரத்தில் இந்த விஷயம் குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள் ளது. இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதி ரான முதலாவது 20 ஓவர் போட்டியில் பங்கேற்க விசாகப்பட்டினம் சென்ற இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லியிடம் உலகக் கிண்ண கிரிக் கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுமா? என்று கேட்கப்பட்டது. 
அதற்கு அவர் பதில் அளிக்கையில், “புல்வாமா தாக்குதல் துயரச் சம்பவத் தால் இந்திய அணி மிகுந்த அதிர்ச் சியும் வேதனையும் அடைந்துள்ளது. எங்களது நிலைப்பாடு மிகவும் எளி தானது. இந்திய அரசும் இந்திய கிரிக் கெட் வாரியமும் என்ன முடிவு எடுக் கிறதோ அதன்படி நாங்கள் நடப்போம். அவர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் மதித்து செயல்படுவோம்” என்று விராத்  கோஹ்லி தெரிவித்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பந்தைப் பிடித்து விக்கெட்டைக் கைப்பற்ற முயற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர் முகம்மது அமீரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் டேவிட் மில்லர். படம்: ஏஎஃப்பி

25 Jun 2019

தென்னாப்பிரிக்க அணியின் பயணம் முடிந்தது

அர்ஜெண்டினாவின் இரண்டாவது கோலைப் போடும் செர்ஜியோ அகுவேரோ (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

25 Jun 2019

கத்தாரைச் சாய்த்த அர்ஜெண்டினா

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி

24 Jun 2019

விராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்