இரு புள்ளிகளை இழந்துவிட்டதாக புலம்பும் கிளோப்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் மீண்டும் முதலிடத் திற்கு முன்னேறியபோதும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற முடியாமல் போனதால் ஏமாற்றம் அடைந்தார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்.
ஓல்டு டிராஃபர்ட் அரங்கில் நேற்று முன் தினம் நள்ளிரவு நடந்த இந்த ஆட்டம் 0-0 எனச் சமநிலையில் முடிந்தது.
போட்டி முடிந்தபின் பேசிய கிளோப், “இது ஒரு வித்தியாசமான ஆட்டமாக இருந்தது. எண்ணியதுபோலவே எங்களின் தொடக்க மும் அமைந்தது. அதன்பின் ஹெரேரா, மாட்டா, லிங்கார்ட் என யுனைடெட் வீரர்கள் காயமடைந்து வெளியேறியதைப் பயன்படுத்தி அக்குழுவை வீழ்த்தியிருக்க வேண்டும். ஆனால், நாங்கள்  அதைச் செய்யத் தவறி விட்டோம்,” என்று வருத்தப்பட்டார்.
மற்றோர் ஆட்டத்தில் ஆர்சனல் 2-0 என சௌத்ஹேம்டனைத் தோற்கடித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

21 Apr 2019

‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி