கிண்ணத்தை தக்கவைத்த சிட்டி

லண்டன்: கடைசி பெனால்டி வாய்ப்பில் ரஹீம் ஸ்டெர்லிங் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வலைக்குள் புக, இங்கிலிஷ் லீக் கிண்ணத்தைத் தக்கவைத்துக் கொண்டது மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு.
செல்சி குழுவிற்கு எதிரான இறுதி ஆட்டம் கூடுதல் நேரம் வரை சென்றும் இரு தரப்பும் ஒரு கோல்கூட அடிக்க முடியாமல் போனது. இருப்பினும், பெனால்டி வாய்ப்புகளில் 4-3 என்ற கணக்கில் வென்று, சிட்டி ஆறாவது முறையாக கிண்ணத்தைக் கைப் பற்றியது.
இரண்டு வாரங்களுக்குமுன் தனக்குச் சொந்தமான எட்டிஹாட் விளையாட்டரங்கில் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் 6-0 என்ற கோல் கணக்கில் சிட்டி, செல்சியை வெற்றிகொண்டது.

அந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியிருந்த சிட்டியின் செர்ஜியோ அகுவேரோ நேற்று அதிகாலை நடந்த லீக் கிண்ண இறுதி ஆட்டத்திலும் கோல் வேட்டையைத் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற் கேற்ப, சில பொன்னான கோல் வாய்ப்புகள் அவருக்குக் கிட்டிய போதும் அவற்றை வீணடித்து விட்டார்.
செல்சி குழுவில் இருந்து ஹிகுவைன் நீக்கப்பட, தாக்குதல் பகுதியில் ஈடன் ஹசார்ட் சிட்டி யின் தற்காப்பைத் தனியொரு வனாக முன்னேறி, கோல்களை அடிப்பார் என நம்பப்பட்டது. கடந்த டிசம்பரில் செல்சி 2-0 என்ற கோல் கணக்கில் சிட்டியைத் தோற்கடித்ததில் ஹசார்டின் பங்கு அளப்பரியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது