ஆஸ்திரேலியாவுக்குப் பதிலடி கொடுக்க முனைப்புடன் காத்திருக்கும் இந்தியா

பெங்களூரு: ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையிலான இரண்டு டி20 போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டி20 கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நடை பெறுகிறது.
இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டிய நெருக்கடி விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது.
இதில் தோற்றால் இந்தியா தொடரை இழந்துவிடும். வெற்றி பெற்றால் மட்டுமே தொடரைச் சமன் செய்ய முடியும்.
மேலும் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பதிலடி கொடுக்க வேண்டிய எதிர்பார்ப்பும் இந்திய ரசிகர்களிடையே உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தி முனைப்புடன் விளையாடுவர் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
விசாகப்பட்டினத்தில் இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியைத் தழுவியது.
கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அவரால் ஆஸ்தி ரேலியாவின் கடைசி நேர வீரர்களுக்கு ஏற்ற வகையில் நேர்த்தியாக வீச முடியாமல் 14 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.
இதனால் இன்றைய போட்டிக் கான அணியில் அவர் இடம்பெற மாட்டார் என்று நம்பப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!