டட்சுமா யோ‌ஷிடாவுக்கு வாய்ப்பு

சிங்கப்பூர் காற்பந்துக் குழு வுக்கான புதிய நிர்வாகி தேடப் பட்டு வருகிறார்.
இந்தத் தேடல் படலம் அடுத்த மாதம் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ஜப்பானிய காற் பந்து லீக் போட்டி பயிற்றுவிப் பாளரான டட்சுமா யோ‌ஷிடா சிங்கப்பூர் குழுவின் அடுத்த நிர்வாகியாக நியமிக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப் பதாக தெரியவந்துள்ளது. 44 வயது டட்சுமாவை ஜப்பான் காற் பந்துச் சங்கம் சிங்கப்பூருக்குப் பரிந்துரை செய்துள்ளது.