ஒரு வாரச் சம்பளம் அபராதம்;  மன்னிப்பு கேட்ட அரிஸபலகா

லண்டன்: நேற்று முன்தினம் நடைபெற்ற இங்கிலிஷ் லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டியிடம் செல்சி தோற்றது.
ஆட்டத்தில் செல்சி தோற் றதைவிட நிர்வாகி மொரிசியா சாரியின் சொல்லுக்கு கோல் காப்பாளர் கேப்பா அரிஸபலகா கீழ்ப்படியாதது பெரிதும் பேசப்படு கிறது.
ஆட்டம் பெனால்டி ‌ஷூட்அவுட் டுக்குச் செல்ல இருந்தபோது அரிஸபலகாவுக்குப் பதிலாக வில்லி கபலேரோவைக் களமிறக்க சாரி முடிவெடுத்தார்.
ஆனால் திடலைவிட்டு வெளிவர அரிஸபலகா மறுத்து விட்டார். இதையடுத்து, நடைபெற்ற பெனால்டி ‌ஷூட்அவட்டில்  செல்சி 4=3 எனும் கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
நிர்வாகியின் உத்தரவுக்கு எதிராக நடந்துகொண்ட அரிஸபல காவை குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
ஆனால் அரிஸபலகா காயம் காரணமாகச் சிரமப்படுகிறார் என்று தாம் தவறாக எண்ணியிருந் ததாக சாரி தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில், நிர்வாகியின் சொல்லுக்குக் கீழ்ப்படியக்கூடாது என்று தாம் நினைக்கவில்லை என்று அரிஸபலகா கூறினார்.
இருப்பினும், நிர்வாகியின் சொல்லுக்குக்  கீழ்ப்படியாததற்கு அரிஸபலகா அவரது ஒரு வாரச் சம்பளத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தாம் தவறு ஒன்றும் செய்ய வில்லை என்றபோதிலும் சூழ்நிலை யைக் கையாண்ட விதம்தான் தவறு என்றும் அரிஸபலகா ஒப்புக்கொண்டார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில்,  நாளை அதிகாலை நடைபெற இருக்கும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவுடன் மோதுகிறது செல்சி.
லீக் கிண்ணப் போட்டியில் நடந்தவற்றை ஒதுக்கிவிட்டு நாளைய ஆட்டத்தில் செல்சி கவனம் செலுத்தி வருகிறது.
கோப்ஹம் பயிற்சி மைதானத்தில் செல்சி வீரர்கள் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டனர். 
ஸ்பர்சுக்கு எதிரான ஆட்டத் தில் அரிஸபலகா விளையாடுவார் என்று நம்பப்படுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற பயிற்சியில் அவர் ஈடுபட்டார்.
சாரி  செல்சியின் நிர்வாகியாக தொடர்வார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் போட்டு கொண்டாடும் லயனல் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ்

19 Mar 2019

மெஸ்ஸி ஹாட்ரிக்:  வாகை சூடிய பார்சிலோனா

லிவர்பூலின் சாடியோ மானேவிடமிருந்து (இடமிருந்து இரண்டாவது) பந்தைப் பறிக்க முயலும் ஃபுல்ஹம் ஆட்டக்காரர். படம்: இபிஏ

19 Mar 2019

லிவர்பூல் வெற்றி; செல்சிக்குப் பின்னடைவு