ஜப்பானிய லீக் குழுவுடன் விளையாடும் மேன்சிட்டி

தோக்கியோ: அடுத்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவம் தொடங்கு வதற்கு முந்தைய ஆட்டம் ஒன்றில், இவ்வாண்டு ஜூலை 27ஆம் தேதி மான்செஸ்டர் சிட்டி குழு, ஜப்பா னிய காற்பந்து லீக் குழுவான யோகோஹாமா எஃப்.மரினோசுடன் பொருதவுள்ளது. 
இவ்விரு காற்பந்துக் குழுக் களும் முதன்முறையாக தொடங்க உள்ள யூரோ-ஜப்பான் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ளன. ஜப்பானில் அதிகமான எண்ணிக் கையில் பிரிமியர் லீக் ஆதரவா ளர்கள் இருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அமோக வர வேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. அடுத்த பருவத்திற்கு மேன்சிட்டி வீரர்களை இந்த ஆட்டம் தயார்ப்படுத்தும். ஆசியா வில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள சிட்டியின் மற்ற ஆட்டங்கள் குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
லீக் கிண்ண இறுதிச் சுற்றில் செல்சியை வென்று கிண்ணத்தை ஏந்திய மேன்சிட்டி வீரர்கள். படம்: இபிஏ

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகிழ்ச்சியை சக வீரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பங்ளாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன் (வலக்கோடி). படம்: இணையம்

26 Jun 2019

பங்ளாதேஷ் அசத்தல் வெற்றி