உலகக் கிண்ணக் காற்பந்து: கத்தாருடன் மற்ற நாடுகள் இணையும் சாத்தியம்

அபுதாபி: 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பங்கேற்கும் குழுக்களின் எண்ணிக்கை தற்போதைய 32லிருந்து 48ஆக உயர்த்துவது குறித்து அண்மை யில் பேச்சு எழுந்துள்ளது. 
இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்கும் குழுக்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் போட்டியை ஏற்று நடத்தும் கத்தா ருடன் ஐக்கிய அரபு சிற்றரசுகள், குவைத், ஓமான் ஆகிய நாடுகளும் இணையும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அதற்கு முதலில் கத்தாருடன் நிலவும் அரசதந்திர பிரச்சினையை மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றுசேர்ந்து தீர்க்க வேண்டும் என்று ஐக்கிய அரபு சிற்றரசுகளின் விளையாட்டுத் துறை தலைவர் முகம்மது கல்ஃபான் அல்-ரொமைதி கூறி உள்ளார்.
கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் குழுக்களின் எண் ணிக்கை 48ஆக உயர்த்தப்படுவது குறித்து ஃபிஃபா அமைப்பு அடுத்த மாதம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், சிறிய நாடான கத்தாரால் மட்டும் இப்போட்டியை ஏற்று நடத்துவது கடினம் என்று அந்த அமைப்பு ஏற்கெனவே எச்ச ரித்திருந்தது.
வளைகுடா பகுதியில் நிலவி வரும் அரசியல் பிளவின் காரணமாக அவ்வட்டார நாடுகள் இப்போட்டியை இணைந்து நடத்து வது சிக்கலான ஒன்று.
 ஐக்கிய அரபு சிற்றரசுகள், சவூதி அரேபியா, பஹ்ரேன், எகிப்து ஆகிய நாடுகள் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் கத்தார் உடனான அரசியல், வர்த்தக, போக்குவரத்து உறவுகளைத் துண்டித்துக்கொண்டன. 
பயங்கரவாதத்தை கத்தார் ஆதரிப்பதாக அந்த நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப் படை ஆதரமற்றவை என்று கூறி கத்தார் அவற்றைப் பகிரங்கமாக மறுத்துள்ளது.
“இந்த விவகாரம் தீர்க்கப் பட்டால், உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்த கத்தாருக்கு உதவுவதில் எங்களுக்கு விருப்பம் உண்டு. 
“ஆனால் இந்த நெருக்கடி தொடர்ந்தால் எங்களால் அதைச் செய்ய முடியாது,” என்று திரு ரொமைதி கருத்துரைத்தார்.