முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை

புதுடெல்லி: அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் நேற்று தொடங்கியது. மார்ச் 2ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாடு களின் கிரிக்கெட் வாரிய நிர் வாகிகள் கலந்துகொள்கின் றனர்.
இந்தியாவில் 2021ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கிண்ணப் போட்டி மற்றும் 2023ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தி வருகிறது. 
ஆனால் இந்திய அரசு இதுவரை வரிவிலக்கு அளிக்க வில்லை. இந்த விவகாரம் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தக வல்கள் தெரிவிக்கின்றன.
உலக டெஸ்ட் வெற்றியாளர் கிண்ண இறுதிப்போட்டி இங்கி லாந்தில் 2021ஆம் ஆண்டு நடைபெறுகிறது. 
இரு நாடுகளுக்கு இடை யிலான டெஸ்ட் போட்டித் தொடரின் முடிவு அடிப்படையில் ஒவ்வோர் அணியும் புள்ளி களைப் பெறும். 
அதிக புள்ளிகளைப் பெறும் அணி, டெஸ்ட் வெற்றியாளர் கிண்ண இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும். இந்தப் போட்டிக் கான ஒளிபரப்பு உரிமம் வழங் குவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப் படுகிறது.
முக்கியமாக, இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி ஜூன் 16ஆம் தேதி பாகிஸ்தானுடன் மோதும்படி அட்டவணை அமைக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துவரும் நிலை யில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுந்துள்ளன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘சிக்சர்’களையும் ‘பவுண்டரி’களையும் விளாசி அசத்திய இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணி