புதிய லெஸ்டர் நிர்வாகிக்கு முதல் ஆட்டத்திலேயே வெற்றி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் லெஸ்டர் சிட்டியின் புதிய நிர்வாகியாக பிரெண்டன் ரோஜர்ஸ் நியமிக்கப்பட்டதை அடுத்து அந்த குழு நேற்று விளையாடிய முதல் ஆட்டத்தை வென்று அவருக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. பிரைட்டன் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் லெஸ்டர் வீழ்த் தியது.
ஸ்காட்லாந்து காற்பந்துக் குழு வான செல்டிக்கைவிட்டு விலகிய ரோஜர்ஸ், இந்த ஆட்டம் தொடங்கு வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் லெஸ்டரின் புதிய நிர்வாகியாக அறிவிக்கப்பட்டார்.
வட அயர்லாந்து நாட்டவரான இவர், லெஸ்டர் சிட்டியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற முதல் ஆட்டத்திலேயே தமது வீரர்கள் வெற்றியைத் தேடித் தந்திருப்பது பெருமிதம் தருவதாகக் கூறினார்.
“தங்களது குழுவை நினைத்து லெஸ்டர் சிட்டி ஆதரவாளர்கள் பெருமைப்பட நான் எனது உயி ரையே கொடுப்பேன்,” என்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்ன தாக லெஸ்டரின் இணையப் பக்கத்தில் ஆணித்தரமான கருத்தை ரோஜர்ஸ் பதிவுசெய்தார்.

அவருடைய உறுதியான கடப் பாட்டைக் காப்பாற்றுவதுபோல நடப்பு பருவத்தில் குழுவின் 10வது வெற்றியை ஆட்டக்காரர்கள் உறுதி செய்தனர்.
இந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் லெஸ்டர் குழு 2-0 எனும் கோல் கணக்கில் முன்னணி வகித்தாலும் தனது பங்கிற்காக ஒரு கோலை அடித்த பிரைட்டனால் இறுதியில் சமநிலையைக் காண முடியவில்லை. 
இந்தத் தோல்வியின் காரண மாக சரிவை நோக்கிச்செல்லும் பிரைட்டன், தற்போது பட்டியலின் 16வது இடத்தில் உள்ளது. அக்குழு இதுவரை விளையாடிய கடைசி ஏழு லீக் ஆட்டங்களில் ஒன்றைக்கூட வெல்லவில்லை.
நேற்று நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் நியூகாசல் யுனைடெட் குழு 2-0 எனும் கோல் கணக்கில் பர்ன்லியை வென்றது. 

இதன் மூலம், லீக்கில் இது வரை தொடர்ச்சியாக எட்டு ஆட்டங்களில் தோல்வி காணாத பர்ன்லியின் சாதனையை முறிய டித்துள்ளது நியூகாசல்.
நியூகாசலுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியின் மூலம் அக்குழு லீக் பட்டியலில் 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பட்டியலில் 18வது இடத்தில் உள்ள சவுத் ஹேம்டன் குழுவைவிட ஏழு புள்ளிகள் அதிகமாக பெற்றுள்ள நியூகாசலுக்கு அடுத்த பருவத்திலும் பிரிமியர் லீக்கில் விளையாடும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி யாகிவிட்டது.