ரியால் மட்ரிட்டைப் புரட்டி எடுத்த பார்சிலோனா

மட்ரிட்: ஸ்பானிய அரசர் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு பார்சிலோனா தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதியின் இரண்டாவது ஆட்டத்தில் ரியாலை அது 3=0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த ஆட்டம் ரியாலின் விளையாட்டரங்கத்தில் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.
முதல் ஆட்டத்தில் இரு குழுக்களும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டிருந்தன.
எனவே, ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 4=1 எனும் கோல் கணக்கில் பார்சிலோனா வாகை சூடியது.
நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கோல் போட தனக்குக் கிடைத்த பல பொன்னான வாய்ப்புகளை ரியால் வீணடித்தது.
கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொண்டு கோல் களைப் போட்ட பார்சிலோனா இறுதி ஆட்டத்தில் வெலன்சியா அல்லது ரியால் பெட்டிசை எதிர்கொள்ளும்.
இறுதிப் போட்டி வரும் மே மாதம் 25ஆம் தேதியன்று நடைபெறும்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘சிக்சர்’களையும் ‘பவுண்டரி’களையும் விளாசி அசத்திய இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணி