தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், மேக்ஸ்வெல்லின் அதிரடியான சதத்தால் இந்தியா வை 7 விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கில் இந்தியா வுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
விசாகப்பட்டினத்தில் நடை பெற்ற முதல் போட்டியில் ஆஸ்தி ரேலியா வென்றதால் இரண் டாவது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா களமிறங் கியது.
பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஃன்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக ‌ஷிகர் தவானும் லோகேஷ் ராகுலும் களமிறங் கினர்.

இருவரும் அடித்து விளை யாடியதால் இந்தியா 'பவர் பிளே'யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ஓட்டங்கள் சேர்த்தது.
கேஎல் ராகுல் 26 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 47 ஓட்டங்கள் சேர்த்து ஆட்ட மிழந்தார். தவான் 24 பந்துகளில் 14 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினார்.
ரிஷப் பன்ட் ஓர் ஓட்டம் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்தியா 11 ஓவர்களில் 74 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
நான்காவது விக்கெட்டுக்கு விராத் கோஹ்லியுடன் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!