டோனி 350 சிக்சர்கள் அடித்து சாதனை

பெங்களூரு: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற் றது. இதில் எம்எஸ் டோனி 23 பந்துகளில் 40 ஓட்டங் களைக் குவித்தார். அவரது ஸ்கோரில் தலா மூன்று பவுண் டரி மற்றும் சிக்ஸர்கள் விளாசினார். முதல் சிக்ஸரை அடித் ததன் மூலம் அனைத்துலக கிரிக்கெட் அரங்கில் 350 சிக்ஸர்களைப் பதிவு செய்தார். இதன்மூலம் 350 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மொத்தமாக 352 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ரோகித் சர்மா 349 சிக்ஸர்களும், சச்சின் டெண்டுல்கர் 264 சிக்ஸர்களும், யுவராஜ் சிங் 249 சிக்ஸர்களும், சவுரவ் கங்குலி 246 ஓட்டங்களும் அடித்துள்ளனர். அனைத்துலக அளவில் கிறிஸ் கெய்ல் முதல் இடத்திலும், ஷாகித் அப்ரிடி 2வது இடத்திலும் மெக்கல்லாம் 3வது இடத்திலும் எம்எஸ் டோனி 4வது இடத்திலும் ஜெயசூர்யா 5வது இடத்திலும் ரோகித் சர்மா 6வது இடத்திலும் உள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

21 Apr 2019

‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி