ஆர்சனல் - ஸ்பர்ஸ் மோதல்

இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டி யின் இன்று நடைபெறும் டோட்டன் ஹம் ஹாட்ஸ்பர் குழுவுக்கும் ஆர் சனலுக்குமான மோதல் இந்த இரு குழுக்களிடையேயான பலப் பரிட்சையாக பார்க்கப்படுகிறது.
கடந்த இரு ஆட்டங்களில் பர்ன்லி, செல்சி குழுக்களிடம் தோல்வியைத் தழுவிய ஸ்பர்ஸ் குழு இதில் வெற்றி பெறவில்லை என்றால் அந்தக் குழுவின் வீழ்ச்சி ஆரம்பிக்கும் அபாயம் உள்ளதாக அதன் ரசிகர்கள் கவலைப்படுகின் றனர். 
அதேசமயம், வெஸ்ட் ஹேம் குழுவிடம் ஜனவரி மாத மத்தியில் 0-1 எனத் தோற்றபின் ஆர்சனல் வெகுவாக மீண்டு வந்துள்ளது. அதன்பின் அனைத்துப் போட்டி களிலும் நடைபெற்ற ஒன்பது ஆட்டங்களில் ஆறில் ஆர்சனல் வென்றுள்ளது. அத்துடன், மொத் தம் 18 கோல்களைப் போட்டுள்ளது.
இதெல்லாம் போதாதென்று, ஆகக் கடைசியாக போர்ன்மத்துட னான போட்டியில் 5-1 என்ற கோல் எண்ணிக்கையில் அந்தக் குழுவை துவம்சம் செய்தது அதன் ரசிகர்களை துள்ளிக் குதிக்க வைத்துள்ளது. ஆர்சனல் போட்ட ஐந்து கோல்களையும் அந்தக் குழுவைச் சேர்ந்த ஐந்து வெவ்வேறு ஆட்டக்காரர்கள் போட்டது குறிப் பிடத்தக்கது. ஒருவழியாக ஆர் சனல் தனது தற்காப்பு அரணை சீர்படுத்திய நிலையில், யூரோப்பா லீக் போட்டியில் பேட் பிரிசோவ் குழுவுடனும் செளத்ஹேம்டன் குழுவுடனும் அது மோதியபோது எதிரணியினரை கோல் எதுவும் போடவிடாமல் தடுத்துள்ளது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டம் தொடங்குவதற்குமுன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணித் தலைவர் விராத் கோஹ்லியுடன் கைகுலுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்.எஸ்.டோனி. படம்: ஏஎஃப்பி

23 Apr 2019

ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர்களைத் தாண்டிய முதல் இந்திய வீரர் டோனி