கோஹ்லி: நான்காவது வீரராக விளையாடத் தயார்

ஹைதராபாத்: ஏரன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 
இரு அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா 2=0 என்ற கணக்கில் கைப் பற்றியது.
ஐந்து ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. 
உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி நான்காவது வரிசையில் விளையாட வேண்டும் என்று பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி அண்மையில் யோசனை தெரி வித்து இருந்தார். ஒருநாள் போட்டியில் அவர் தற்போது மூன்றாவது வரிசையில் ஆடி வருகிறார். இந்த நிலையில், ரவி சாஸ்திரியின் யோசனைக்கு கோஹ்லி பதில் அளித்து உள்ளார். 
“நான் நான்காவது வீரராக விளையாடத் தயார். பலமுறை நான் அந்த வரிசையில் ஆடி இருக்கிறேன். இந்த வரிசையில் ஆடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதான். மூன்றாவது வரிசையில் இருந்து நான்காவது வரிசையில் ஆடுவதால் எனது ஆட்டத்தில் மாற்றம் வந்துவிடப் போவதில்லை. ஆட்டத்திறன்தான் முக்கியம். சூழ்நிலைக்குத் தகுந்த வாறு எப்படி விளையாடுவது என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்,” என்றார் கோஹ்லி.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கனடா அணியைச் சேர்ந்த ரவீந்தர் பால் சிங்

23 Aug 2019

ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் கனடா கிரிக்கெட் வீரர்

லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். படம்: ராய்ட்டர்ஸ்

23 Aug 2019

ஆர்சனலுக்கான சவால்