கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்குத் தடை: இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு

துபாய்: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், ஆதரிக்கும் நாடுகள் உடனான கிரிக்கெட் உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வேண்டு கோளை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) நிராகரித்தது. அண்மையில் காஷ்மீரின் புல்வாமாவில் இடம்பெற்ற பயங்கர வாதத் தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 40 பேர் கொல்லப் பட்டனர். இதற்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்புள்ளதாக இந்திய அரசாங்கம் கூறி வருகிறது. இதையடுத்து, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளுடனான உறவைத் துண்டிக்கவேண்டும் என வலியுறுத்தி பிசிசிஐ கடிதம் எழுத, அதற்கான அதிகாரம் தனக்கு இல்லை என ஐசிசி தெரிவித்துவிட்டது. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கனடா அணியைச் சேர்ந்த ரவீந்தர் பால் சிங்

23 Aug 2019

ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் கனடா கிரிக்கெட் வீரர்

லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். படம்: ராய்ட்டர்ஸ்

23 Aug 2019

ஆர்சனலுக்கான சவால்