மேலேறி வரும் மேன்யூ

லண்டன்: சௌத்ஹேம்டன் குழு விற்கு எதிரான இங்கிலிஷ் பிரி மியர் லீக்  காற்பந்து ஆட்டத்தில் முதலில் கோலை விட்டுத்தந்த போதும் பின்னர் எழுச்சியுடன் ஆடிய மான்செஸ்டர் யுனைடெட் குழு 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் யுனைடெட் குழு 58 புள்ளிகளுடன் பட்டியலின் 4ஆம் இடத்திற்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்திலும் யுனை டெட்டின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் ரொமேலு லுக்காகு.  கடந்த வார மத்தியில் கிரிஸ்டல் பேலஸ் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல்களை அடித்த லுக்காகு, நேற்று முன்தினம் இரவு நடந்த சௌத்ஹேம்டனுக்கு எதிரான ஆட்டத்திலும் இரு கோல்களைப் போட்டார்.
முந்தைய நிர்வாகி மொரின் யோவின்கீழ் லுக்காகு கோலடிக்கத் தடுமாறி வந்த நிலையில், இடைக்கால நிர்வாகியாக சோல் சியார் பொறுப்பேற்ற பிறகு தமது உச்ச ஆட்டத்திறனை அவர் மீட்டெடுத்துள்ளார். “ஆட்டத்தை வெல்வதிலும் சக வீரர்களுக்கு உதவுவதிலுமே எனது கவனம் இருந்தது,” என்றார் லுக்காகு.
ஓல்டு டிராஃபர்ட் அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தில் யுனைடெட்டின் நட்சத்திர வீரர் போக்பா பெனால்டி வாய்ப்பை வீணடித்தார். ஆயினும், அக்குழுவினர் மன உறுதியை இழக்கவில்லை.
“எமது வீரர்கள் மிகச் சிறப்பாக, குறிப்பாக இரண்டாம் பாதியில் அற்புதமாக ஆடினர். தங் களது வெற்றிப் பயணத்தைத் தொடரமுடியும் என அவர்கள் திடமாக நம்புகின்றனர்,” என்று சோல்சியார் கூறினார்.
மற்றோர் ஆட்டத்தில், ரியாத் மாரெஸ் அடித்த ஒற்றை கோல் மூலம் போர்ன்மத் குழுவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்திய மான் செஸ்டர் சிட்டி குழு பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது (லிவர்பூல் - எவர்ட்டன் ஆட்டத் திற்கு முந்தைய நிலவரம்).
டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்-ஆர்சனல் குழுக்கள் மோதிய மற்றோர் ஆட்டம் 1-1 எனச் சமநிலையில் முடிந்தது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கனடா அணியைச் சேர்ந்த ரவீந்தர் பால் சிங்

23 Aug 2019

ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் கனடா கிரிக்கெட் வீரர்

லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். படம்: ராய்ட்டர்ஸ்

23 Aug 2019

ஆர்சனலுக்கான சவால்