பட்டத்தை நெருங்கும் பார்சிலோனா

பட்டத்தை நெருங்கும் பார்சிலோனா

1 mins read

மட்ரிட்: ஸ்பானிய லா லீகா பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ள அட்லெட்டிகோ மட்ரிட் குழுவைவிட பத்துப் புள்ளிகள் அதிகம் பெற்று உள்ளதால் பார்சிலோனா குழு பட்டம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ரியால் மட்ரிட் குழுவின் பெர்னபாவ் அரங்கில் நான்கு நாட்களுக்குமுன் நடந்த அரசர் கிண்ண ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற பார்சிலோனா நேற்று அதிகாலை அங்கு நடந்த லா லீகா ஆட்டத்திலும் 1-0 என ரியாலைத் தோற்கடித்தது.