கோல் அடித்ததும் செல்ஃபி எடுத்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுக் கொண்டாட்டம்

கோலடித்ததைப் புதுமையாகக் கொண்டாடி வியப்பளித்துள்ளார் பிரான்சின் மார்சே குழுவிற்காக விளையாடி வரும் இத்தாலியின் மாரியோ பலோடெலி (இடது). கடந்த ஜனவரியில் நீஸ் குழுவில் இருந்து மார்சேவிற்கு மாறிய பலோடெலி, அதன்பின் நான்கு கோல்களை அடித்துவிட்டார். செயின்ட் எட்டியன் குழுவிற்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் மார்சே 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 12வது நிமிடத்தில் பலோடெலி கலைக்கூத்தாடிபோல் அந்தரத்தில் பறந்து அருமையான கோலை அடித்தார். உடனே எல்லையோரம் நின்றிருந்த புகைப்படக்காரருக்குப் பின்னால் வைத்திருந்த தமது கைபேசியை எடுத்த அவர், சக வீரர்களுடன் செல்ஃபி எடுத்து, அப்போதே அதை இன்ஸ்டகிராம் பக்கத்திலும் பதிவிட்டார். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மான்செஸ்டர் சிட்டியின் ஆறாவது கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (இடது). ஏற்கெனவே ஐந்து கோல்களை விட்டு விரக்தியுடன் இருந்த வாட்ஃபர்ட் கோல்காப்பாளர் சிட்டியின் இந்த கோல் முயற்சியையாவது தடுக்க பாய்ந்தார். ஆனால் அவரது இந்த முயற்சியும் தோல்வியில் முடிய ஸ்டெர்லிங் தமது ‘ஹாட்ரிக்’கை நிறைவுசெய்தார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

வாட்ஃபர்ட்டை ஊதித் தள்ளிய மேன்சிட்டி