முன்னிலையை நீட்டிக்க இந்திய அணி மும்முரம்

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக் கெட் போட்டியில் வென்ற இந்திய அணி, இன்று நடக்கவுள்ள 2வது போட்டியிலும் வெற்றிபெற்று முன்னிலையை நீட்டிக்கும் முனைப்புடன் இருக்கிறது. மே மாத இறுதியில் தொடங்க இருக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அணிகளின் விவரம் ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும். இந்நிலையில், அதில் இடம் பெறவிருக்கும் 15 பேரில் கிட்டத் தட்ட 13 பேரை இந்திய அணி உறுதிசெய்துவிட்டதாகக் கூறப் படுகிறது.

எஞ்சிய இருவர் எவர் என்பதை இப்போது நடந்துவரும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தீர்மானிக்கக் கூடும். காயத்தால் அவதிப்படும் ஹார்திக் பாண்டியா உரிய நேரத் தில் குணமடையாத நிலையில் அவரது இடத்திற்கு விஜய் சங்கரும் ரவீந்திர ஜடேஜாவும் போட்டியிடலாம். இதற்கிடையே, லோகேஷ் ராகுல் தமது உச்ச ஆட்டத்திறனுக்குத் திரும்பியிருப் பதால் முதல் போட்டியில் ஓட்ட மேதும் எடுக்காமல் வெளியேறிய ‌ஷிகர் தவான் கவனமாக ஆடி, ஓட்டம் குவிக்காவிடில் அவரது இடம் பறிபோகக்கூடும். ஆஸ்திரேலிய அணித்தலை வர் ஃபின்ச் ஓட்டம் குவிக்கத் தடுமாறுவது அதன் பயிற்றுவிப் பாளர் ஜஸ்டின் லாங்கருக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், இளம் ஆல்ரவுண்டர் சேம் கரன் என இருவரை ஒரே ஓவரில் வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய நேப்பாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லமிசானேவை (இடது) பாராட்டி மகிழும் டெல்லி அணித்தலைவர் ஷ்ரேயாஸ். படம்: ஏஎஃப்பி

22 Apr 2019

பழிதீர்க்கப்பட்ட பஞ்சாப்

இன்னும் ஐந்து ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே இந்தப் பருவத்தின் இத்தாலிய லீக் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் யுவென்டஸ் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள் (இடமிருந்து) யுவான் குவட்ரடோ, பிளேஸ் மட்விடி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, எம்ரி கேன். படம்: ஏஎஃப்பி

22 Apr 2019

ரொனால்டோ வரலாற்றுச் சாதனை