விஜய் சங்கரா ஜடேஜாவா?

இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் 30ஆம் தேதி தொடங்குகிறது. உலகக்கிண்ணத்திற்கான சிறந்த அணியைத் தேர்வு செய்ய அனைத்து நாடுகளும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின் றன. இறுதிப் பட்டியலை அடுத்த மாதம் இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பெறுவது உறுதி. ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டால் அவரும் இடம்பெற வாய்ப்புள்ளது. குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் இடம் பெறலாம். கூடுதல் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்று நினைத்தால் ஜடேஜாவுக்கு வாய்ப்பு. மாறாக வேகப்பந்து வீச்சு, ஆல்ரவுண் டர் தேவை என்றால் விஜய் சங்கர் இடம் பெறலாம். இதனால் இருவருக்குமிடை யில் கடும்போட்டி நிலவுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது