கிரிக்கெட் வர்ணனையாளரை வாட்டியெடுத்த இணையவாசிகள்

புதுடெல்லி: இந்திய அணிக்கு ‘ஜால்ரா’ தட்டும் வர்ணனையாளர் கள் மலிந்து வரும் காலக் கட்டத் தில், தொலைக்காட்சிகளும் அவர் களுக்குத்தான் அதிக முன்னுரிமை வழங்கிவரும் இந்தக் காலத்தில் சஞ்சய் மஞ்சுரேக்கர் (படம்) பெரிய அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரள வுக்கு இந்திய அணி நிர்வாகம், தேர்வுமுறைகள் குறித்து விமர் சனங்களை வைத்து வருவது வரவேற்கத்தக்கது.
இந்நிலையில் ஹைதராபாத் தில் நடைபெற்ற ஆஸ்திரேலி யாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்போது தன் டுவிட்டர் பக்கத்தில், ஒருநாள் போட்டியின் நீளம் குறித்து கேள்வி எழுப்பி 10 ஓவர்கள் அதிகம்தான் என்றார். 
ஒருவேளை 99/4 என்ற நிலை யில் 236 ஓட்டங்களை இந்தியா இழுத்து இழுத்து வென்றதில் அவர் சோர்வடைந்திருக்கலாம்.

சஞ்சய் மஞ்சுரேக்கர், “50 ஓவர் கிரிக்கெட் எப்போதும் 10 ஓவர்கள் அதிகமாக ஆடப்படுவதா கவே கருதுகிறேன்,” என்று தன் டுவிட்டரில் கருத்துத் தெரிவித் திருந்தார்.
இந்த டுவிட்டர் பதிவைக் கண்ட இணையவாசிகள் கோபத் தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். 
அதில் ஒருவர், “நீங்கள் வர்ணனையில் இருக்கும்போது கூட நான் என் நண்பர்களிடத்தில் இதைத்தான் கூறுவேன்,” என்று கிண்டலடித்துள்ளார். இன்னொரு வர் ‘40 ஓவர்களுக்குப் பிறகு தொலைக்காட்சியை அணைத்து விட வேண்டியதுதானே,” என்று கிண்டலடித்துள்ளார்.
“நீங்கள் வர்ணனை அளிக்கும் போது 10 ஓவர்களே 50 ஓவர்கள் போன்ற சோர்வை அளிப்பதாக இருக்கும்,” என்று இன்னொருவர் சாடியுள்ளார்.

Loading...
Load next