ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்த இந்திய அணி

நாக்பூர்: நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. 
பூவா தலையாவில் வென்ற  ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஏரன் ஃபிஞ்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 
இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ‌ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து தவான் 21 ஓட்டங்களிலும் அம்பதி ராயுடு 18 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
நான்காவது விக்கெட்டுக்கு விராத் கோஹ்லியுடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். 

இந்த ஜோடி இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கையை மிக வேகமாக உயர்த்தியது. 46 ஓட்டங் கள் எடுத்தபோது, விஜய் சங்கர் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந் தார். கேதர் ஜாதவ் 11 ஓட்டங்களிலும் டோனி ஓட்டம் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந் தாலும் விராத் கோஹ்லி தனது 40வது சதத்தை அடித்தார். 
அவர் 116 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், இந்தியா 48.2 ஓவர்களில் 250 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவின் விக்கெட்டைக் கைப்பற்றி கொண்டாடும் இந்தியாவின் குல்தீப் சிங் (இடது), விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன். படம்: ஏஎஃப்பி

17 Jul 2019

வில்லியம்சன்: இறுதியில் யாரும் தோற்கவில்லை

அரையிறுதியில் தோல்வி கண்ட இந்திய அணியில் ஓட்டக் குவிப்பில் முதலிடம் பிடித்த ரோகித் சர்மா (5 சதம் உள்பட 648 ஓட்டங்கள்), வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (18 விக்கெட்) ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு இடம் கிடைக்கவில்லை. 

17 Jul 2019

உலகக் கிண்ணக் கனவு அணியில் ரோகித், பும்ரா

வெற்றியாளர் கிண்ணப் போட்டி மூலம் டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும் எனப் புஜாரா தெரிவித்துள்ளார்.

17 Jul 2019

புஜாரா: டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும்