பிஎஸ்ஜி அணியை 3-1 கோல் கணக்கில் தோற்கடித்த மன்செஸ்டர் யுனைட்டட்

யுஏஃபா வெற்றியாளர் லீக் போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் பிஎஸ்ஜி அணிக்கும் இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் 3-1 கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டட் அணி வென்றது.

ஆட்டம் தொடங்கிய இரண்டு நிமிடங்களில் ரொமெலு லுக்காக்கு மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கு முதல் கோலைப் போட்டார். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பிஎஸ்ஜி ஆட்டக்காரர் ஜுவான் பர்னெட் 12ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். ரொமெலு பின்னர் 30ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை தமது அணிக்குப் பெற்றுத் தந்தார்.

இறுதியாக மார்கஸ் ரெஷ்ஃபர்ட் 90ஆவது நிமிடத்தில் கோலடித்து மன்செஸ்டர் யுனைட்டடின் வெற்றியை உறுதி செய்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ‘பைசிக்கிள் கிக்’ மூலம் அருமையான கோலடித்த அத்லெட்டிக் பில்பாவ் குழுவின் அடூரிஸ். படம்: இபிஏ

18 Aug 2019

கடைசி நேர கோலால் சோகம்