இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி:  தென்னாப்பிரிக்கா வெற்றி

செஞ்சூரியன்: இலங்கை கிரிக் கெட் அணி தென்னாப்பிரிக் காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 
இரு அணிகளுக்கு இடை யேயான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனை படைத்திருந்தது.
தற்போது இவற்றுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடை பெற்று வருகிறது. 
ஜோகன்னஸ்பர்க்கில் நடை பெற்ற முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன் தினம் பகல் இரவாக நடை பெற்றது. இதில் முதலில் விளை யாடிய தென்னாப்பிரிக்கா 45.1 ஓவரில் 251 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. 
குயின்டன் டி காக் 70 பந்து களில் 94 ஓட்டங்களும் (17 பவுண்டரி, 1 சிக்சர்) அணித் தலைவர் டு பிளிசிஸ் 57 ஓட்டங் களும் குவித்தனர். 

ஆட்டத்தில் வென்றதை உற்சாகத்துடன் கொண்டாடும் 
தென்னாப்பிரிக்க வீரர்கள். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது