தமது பெயர் சூட்டப்பட்ட ஓய்வறையைத் திறந்துவைக்க தன்னடக்கத்துடன் டோனி மறுப்பு

மும்பை வான்கடே மைதானத்தில் கவாஸ்கர் பெயரில் ஒரு மாடமும் டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் உள்ள ஒரு நுழைவாயிலுக்கு சேவாக் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல ராஞ்சி மைதானத்தில் உள்ள ஓய்வறை பகுதிக்குத் டோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் நடைபெற்ற நிர்வாகக் கூட்டம் ஒன்றில் வடக்கு ‘பிளாக் ஸ்டாண்ட்’ பகுதிக்குத் டோனியின் பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டது என்று ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க செயலர் தெபசிஸ் சக்ரபோர்தி கூறுகிறார். 
“டோனி பெவிலியனைத் திறந்துவைக்க டோனியை அழைத்தோம். ஆனால், நானும் இந்த மைதானத்துடன் தொடர்புடையவன். என்னுடைய சொந்த வீட்டை நானே திறந்துவைப்பதா எனத் தன்னடக்கத்துடன் மறுத்துவிட்டார்,” என்று அவர் கூறியுள்ளார்.
இதனால் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கமே பெவிலியனைத் திறந்துள்ளது. எனினும் இதற்கென விமரிசையாக நிகழ்ச்சிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.