மேன்யூவிற்கு கனவிலும் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி

பாரிஸ்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் ஆட்டம் ஒன்றில் நேற்று மான்செஸ்டர் யுனைடெட், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மாயின் (பிஎஸ்ஜி) குழுக்கள் பொருதின. 
பிஎஸ்ஜியின் சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுனைடெட் 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது. 
யுனைடெட்டின் சொந்த அரங்கில் இவ்விரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற முதல் ஆட்டத்தை 2-0 எனும் கோல் கணக்கில் பிஎஸ்ஜி வென்று இருந்தது. 
இந்த ஆட்டத்தில் யுனைடெட் டிற்கு கிடைத்த வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 3-3 என்று சமநிலை கண்டாலும் எதிரணி அரங்கில் அதிக கோல்கள் அடித்ததன் பேரில் யுனைடெட் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
பிஎஸ்ஜிதான் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் என இந்த ஆட்டம் முடிவைக் காணவிருந்த நிலையில், தலையெழுத்தையே திருப்பிப் போட்டார் யுனைடெட்டின் தாக்குதல் ஆட்டக்காரர் மார்கஸ் ரேஷ்ஃபர்ட். 
ஆட்டத்தின் இறுதிக்கட்டமான 94வது நிமிடத்தில் யுனைடெட்டிற்கு கிட்டிய அரிய பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் அவர்.
வலையை நோக்கி அவர் வேகமாக உதைத்த பந்தைத் தடுக்க பிஎஸ்ஜி கோல்காப்பாளர் சரியான திசையில் பாய்ந்தாலும் கோல் விழுவதை அவரால் தடுக்க முடியவில்லை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

வெற்றியாளர் கிண்ணப் போட்டி மூலம் டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும் எனப் புஜாரா தெரிவித்துள்ளார்.

17 Jul 2019

புஜாரா: டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும்

நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன். படம்: ஏஎஃப்பி

17 Jul 2019

வில்லியம்சன்: இறுதியில் யாரும் தோற்கவில்லை