தோற்றும் மனந்தளரா நிர்வாகி

ரென் (பிரான்ஸ்): யூரோப்பா லீக் காற்பந்தில் காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சின் ரென் குழுவிடம் ஆர்சனல் தோல்வி அடைந்தது. ஆனாலும், அடுத்த வாரம் சொந்த எமிரேட்ஸ் விளையாட்டு அரங்கில் நடக்கவிருக்கும் 2வது ஆட்டத்தில் அதிக கோல் வித்தி யாசத்தில் வென்று, காலிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக ஆர்சனல் நிர்வாகி உனாய் எமெரி கூறி உள்ளார்.

அலெக்ஸ் இவோபி ஆட்டத் தின் மூன்றாவது நிமிடத்திலேயே கோலடிக்க ஆர்சனல் முன்னிலைக் குச் சென்றது. ஆயினும் முற்பாதி ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்கள் இருந்தபோது கிரேக்க வீரர் சாக்ரட்டீஸ் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று திடலைவிட்டு வெளியேற, ஆர்சனல் ஆட்டத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்தது.

அடுத்த இரண்டாவது நிமிடத் திலேயே அருமையான கோலடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வந்தார் ரென் குழுவின் பெஞ்சமின் போரிஜூ. பிற்பாதியில் ஆர்சனல் தற்காப்பு வீரர் நாச்சோ மொன்ரியால் சொந்த கோல் அடித்ததும் ஆட்டம் முடிய மூன்று நிமிடங்கள் இருந்தபோது ரென் வீரர் இஸ்மாலியா சார் ஒரு கோலையும் அடிக்க, ஆர்சனலின் நிலை துன்பகரமானதாகிப்போனது. சொந்த கோல் அடித்த அதிர்ச்சியில் உறைந்துபோன ஆர்சனல் ஆட்டக்காரர் நாச்சோ மொன்ரியால் (பின்னால்). படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மான்செஸ்டர் சிட்டியின் ஆறாவது கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (இடது). ஏற்கெனவே ஐந்து கோல்களை விட்டு விரக்தியுடன் இருந்த வாட்ஃபர்ட் கோல்காப்பாளர் சிட்டியின் இந்த கோல் முயற்சியையாவது தடுக்க பாய்ந்தார். ஆனால் அவரது இந்த முயற்சியும் தோல்வியில் முடிய ஸ்டெர்லிங் தமது ‘ஹாட்ரிக்’கை நிறைவுசெய்தார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

வாட்ஃபர்ட்டை ஊதித் தள்ளிய மேன்சிட்டி