ஸ்மித், வார்னருக்கு இடமில்லை

மெல்பர்ன்: பந்தைச் சேதப்படுத்தியதற்காக ஓராண்டு தடை பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஸ்டீவ் ஸ்மித்தும் டேவிட் வார்னரும் அணிக்குத் திரும்புவது தாமதமாகி வருகிறது. தற்போது இந்தியாவில் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, அதன்பின் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் பாகிஸ்தானுடன் ஐந்து ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது. தடைக்காலம் முடிவதால் ஸ்மித்தும் வார்னரும் அத்தொடரின் கடைசி இரு ஆட்டங்களில் விளையாட முடியும். ஆனாலும் அவ்விருவருக்கும் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அணியில் இடம்பெற வேண்டுமெனில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்கட்டும் என்று அணித் தேர்வாளர் டிரேவர் ஹன்ஸ் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ‘பைசிக்கிள் கிக்’ மூலம் அருமையான கோலடித்த அத்லெட்டிக் பில்பாவ் குழுவின் அடூரிஸ். படம்: இபிஏ

18 Aug 2019

கடைசி நேர கோலால் சோகம்