மேன்யூ ரசிகருக்குக் கத்திக்குத்து

பாரிஸ்: பிஎஸ்ஜி காற்பந்துக் குழுவை அதன் சொந்த அரங்கிலேயே 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்ததன் மூலம் மான்செஸ்டர் யுனைடெட் குழு, சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில், அப்போட்டி முடிந்தபின் பாரிசில் டாக்சியில் சென்ற யுனைடெட் ரசிகர்கள் நால்வர் தமது குழுவின் வெற்றியைக் கொண்டாடியபடி சென்றதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டாக்சி ஓட்டுநர் அவர்களை டாக்சியைவிட்டு இறங்குமாறு கூறியுள்ளார். அத்துடன், பெண் ரசிகர் ஒருவரைக் கத்தியைக் காட்டி அவர் மிரட்டியபோது, அதைத் தடுக்கச் சென்ற 44 வயது ஆடவரைக் கத்தியதால் குத்தியதாகச் சொல்லப் படுகிறது.

பாதிக்கப்பட்ட ஆடவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பந்தப்பட்ட டாக்சி ஓட்டுநரை மெல்பர்ன்: பந்தைச் சேதப்படுத்தியதற்காக ஓராண்டு தடை பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஸ்டீவ் ஸ்மித்தும் டேவிட் வார்னரும் அணிக்குத் திரும்புவது தாமதமாகி வருகிறது. தற்போது இந்தியாவில் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, அதன்பின் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் பாகிஸ்தானுடன் ஐந்து ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது.

தடைக்காலம் முடிவதால் ஸ்மித்தும் வார்னரும் அத்தொடரின் கடைசி இரு ஆட்டங்களில் விளையாட முடியும். ஆனாலும் அவ்விருவருக்கும் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அணியில் இடம்பெற வேண்டுமெனில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்கட்டும் என்று அணித் தேர்வாளர் டிரேவர் ஹன்ஸ் தெரிவித்துள்ளார். பிரெஞ்சு போலிஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ‘பைசிக்கிள் கிக்’ மூலம் அருமையான கோலடித்த அத்லெட்டிக் பில்பாவ் குழுவின் அடூரிஸ். படம்: இபிஏ

18 Aug 2019

கடைசி நேர கோலால் சோகம்