கத்தாரில் நெய்மாருக்குச் சிகிச்சை

பாரிஸ்: வலது காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வரும் பிரேசில், பிஎஸ்ஜி குழுக்களின் ஆட்டக்காரர் நெய்மார் முழுமையான மருத்துவச் சோதனைக்காக கத்தார் செல்ல இருக்கிறார். ஆறு வாரங்களுக்குமுன் காயமடைந்த நெய்மார் பாரிசின் பிரின்சஸ் பார்க் அரங்கில் நேற்று முன்தினம் நடந்த மான்செஸ்டர் யுனைடெட் - பிஎஸ்ஜி குழுக்களுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தைப் பார்வையாளர் பகுதியில் இருந்து பார்த்தார். இந்நிலையில், கத்தாரில் உள்ள உலகப் புகழ்பெற்ற அஸ்பெட்டார் விளையாட்டு மருத்துவ மனைக்கு அவர் செல்லவுள்ளார் என்றும் அங்கு மூன்று நாட்கள் தங்கியிருப்பார் என்றும் பிஎஸ்ஜி குழு தனது டுவிட்டர் பக்கம் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயிற்சிக்காக ஜேடபிள்யூ மரியாட் ஹோட்டலைவிட்டு வெளியேறும் இத்தாலியின் இன்டர் மிலான் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Jul 2019

சிங்கப்பூர் வந்தது இன்டர் மிலான் குழு