விராத் கோஹ்லி: இனியொரு சரிவு இருக்காது’

ராஞ்சி: இலக்கை விரட்டியபோது விராத்  கோஹ்லி சதமடித்த ஆட் டங்களில் இந்திய கிரிக்கெட் அணி பெரும்பாலும் தோற்றதில்லை. 
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நேற்று முன்தினம் நடந்த மூன்றாவது ஒருநாள் போட் டியில் கோஹ்லி சதமடித்தும் இந் திய அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இப்படி, இரண்டா வதாகப் பந்தடித்தபோது கோஹ்லி சதமடித்தும் இந்திய அணி தோற் றது இது நான்காவது முறை.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரு போட்டி களில் இந்திய அணி வென்ற நிலையில் 3வது போட்டி இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்றது.
பூவா தலையாவில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. 
இம்முறை ஆஸ்திரேலிய அணி யின் தொடக்கம் அபாரமாக இருந் தது. அணித்தலைவர் ஆரோன் ஃபிஞ்ச்சும் உஸ்மான் கவாஜாவும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 193 ஓட்டங்களைச் சேர்த்தனர். ஃபிஞ்ச் 93 ஓட்டங்களில் ஆட்டமிழந்த போதும் ஒருநாள் போட்டிகளில் தமது முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார் கவாஜா. அவர் 104 ஓட்டங்களை எடுத்தார்.
மேக்ஸ்வெல் 31 பந்துகளில் 47 ஓட்டங்களையும் ஸ்டோய்னிஸ் 26 பந்துகளில் 31 ஓட்டங்களையும் விளாச, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 313 ஓட்டங்களைக் குவித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ‘பைசிக்கிள் கிக்’ மூலம் அருமையான கோலடித்த அத்லெட்டிக் பில்பாவ் குழுவின் அடூரிஸ். படம்: இபிஏ

18 Aug 2019

கடைசி நேர கோலால் சோகம்