இன்று நான்காவது போட்டி; டோனிக்குப் பதிலாக பன்ட்

மொகாலி: இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்குகிறது.
இன்றைய ஆட்டத்திலிருந்தும் வரும் 13ஆம் தேதி நடக்கவுள்ள கடைசி போட்டியில் இருந்தும் இந்திய அணியின் விக்கெட் காப் பாளர் டோனிக்கு ஓய்வு அளிக்கப் பட்டுள்ளது. 
இங்கிலாந்தில் மே, ஜூன் மாதங்களில் நடக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளுடன் டோனி ஓய்வை அறிவிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது. அதன்பின் அக்டோபர் வரை இந்திய அணி சொந்த மண்ணில் அனைத்துலகப் போட்டிகளில் விளையாடாது என்ப தால் ராஞ்சியில் நடந்த மூன்றாவது போட்டியே இந்தியாவில் டோனி விளையாடிய கடைசி அனைத்துலக ஆட்டமாக இருக்கலாம்.
இளம் விக்கெட் காப்பாளர் ரிஷப் பன்ட் அவரது இடத்தை நிரப்புவார் என இந்திய அணியின் பந்தடிப்புப் பயிற்றுவிப்பாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டம் தொடங்குவதற்குமுன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணித் தலைவர் விராத் கோஹ்லியுடன் கைகுலுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்.எஸ்.டோனி. படம்: ஏஎஃப்பி

23 Apr 2019

ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர்களைத் தாண்டிய முதல் இந்திய வீரர் டோனி