சாதனைகளைத் தகர்த்து வரும்  சத நாயகன்

ராஞ்சி: ஆஸ்திரேலியாவுக்கு எதி ரான 3வது போட்டியில் சதமடித்த இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஏராளமான சாதனை களையும் முறியடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் இது அவருக்கு 41வது சதம். இலக்கை விரட்டியபோது 25வது சதம்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் எட்டாவது சதத்தை அடித்ததன்மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையைச் சமன்செய்துள்ளார். இதேபோல், இலங்கைக்கு எதிராகவும் இந்த இருவரும் ஆளுக்கு எட்டு சதங் களை அடித்துள்ளனர்.
ஒருநாள் போட்டிகளில் ஆக அதிக ஓட்டங்களைக் குவித்தவர் களில் ராகுல் டிராவிட்டை (10,768) பின்னுக்குத் தள்ளி மூன்றாமிடம் பிடித்தார் கோஹ்லி (10,760). முதல் இரு இடங்களில் முறையே சச்சினும் கங்குலியும் உள்ளனர். 
குறைந்த போட்டிகளில் 4,000 ஓட்டங்களைக் கடந்த அணித் தலைவர் என்ற பெருமையையும் கோஹ்லி தேடிக்கொண்டார். 63 இன்னிங்ஸ்களில் அவர் இந்த மைல்கல்லைக் கடந்தார். முன்ன தாக, தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் 77 இன்னிங்ஸ் களில் 4,000 ஓட்டங்களைக் கடந் திருந்தார்.
அசாருதீன், கங்குலி, டோனி ஆகியோருக்குப் பின் இந்திய அணித்தலைவராக 4,000 ஓட்டங் களுக்கு மேல் எடுத்தவர் என்ற பெயரும் கோஹ்லிக்குக் கிட்டியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின். கோப்புப்படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’