உள்ளூர் பயிற்றுவிப்பாளர்கள் இந்தியாவில் சாதனை

சென்னை: சிங்கப்பூரைச் சேர்ந்த காற்பந்துப் பயிற்றுவிப்பாளர்கள் இந்தியாவில் சாதனை புரிந் துள்ளனர்.
இந்திய காற்பந்து லீக்கின் வெற்றியாளர் பட்டத்தை சென்னை சிட்டி குழு நேற்று முன்தினம் கைப்பற்றியது.
சென்னை சிட்டி குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அக்பர் நவாசும் அவருக்கு உதவியாளராக இருக்கும் கே. பாலகுமாரனும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் இருவரும் தென் கிழக்காசியாவுக்கு வெளியே நடைபெறும் காற்பந்து லீக்கில்  வெற்றி பெற்றுள்ள முதல் சிங்கப்பூரர்கள் என்று நம்பப் படுகிறது. சிங்கப்பூரில் சிறந்த காற்பந்து பயிற்றுவிப்பாளர்கள் இருப்பதை இது காட்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பாலகுமாரன் தெரிவித்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்