ஸிடானுக்குப் புது பயிற்றுவிப்பாளர் பதவியை வழங்கியுள்ளது ரியால் மெட்ரிட்

சாந்தியாகோ சொலாரியைப் பதவி நீக்கம் செய்ததை அடுத்து ஸினடின் ஸிடானை ஸ்பானிய காற்பந்து குழு ரியால் மெட்ரிட் ஏற்றுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கவுள்ள இந்த ஒப்பந்தம் பற்றி அக்குழு நேற்று தெரிவித்தது.

சென்ற ஆண்டு மே மாதத்தில் ஸிடான் ரியால் மெட்ரிட்டின் பயிற்றுவிப்பாளர் பதவியைவிட்டு விலகுவதற்கு முன்பாகத் தொடர்ச்சியாக மூன்று சாம்பியன் லீக் கிண்ணங்களை வென்றிருந்தார்.

அதன் பின் அவரிடமிருந்து பதவியை ஏற்ற ஹுலன் லொபடேகி சென்ற ஆண்டு பதவி நீக்கப்பட்டு, இப்போது ஏறத்தாழ 4 மாதங்களுக்குப் பிறகு சொலாரியும் நீக்கப்பட்டுள்ளார்.

22 ரியால் மெட்ரிட் ஆட்டங்களை வழிநடத்திய சொலாரி 8 ஆட்டங்களில் தோற்று, இரண்டு ஆட்டங்களில் சமநிலை கண்டார்.     

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது