காலிறுதி முனைப்புடன் லிவர்பூல், பார்சிலோனா

மியூனிக்: காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டங்கள் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்த தால் இங்கிலாந்தின் லிவர்பூல் காற்பந்துக் குழுவும் ஸ்பெயினின் பார்சிலோனா குழுவும் நாளை அதிகாலை நடக்கவுள்ள இரண் டாவது ஆட்டங்களில் வென்று சாம்பியன்ஸ் லீக்கின் அடுத்த சுற்றில் அடியெடுத்து வைக்கத் துடிப்புடன் களமிறங்கவுள்ளன. ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் குழுவைத் தனது ஆன்ஃபீல்ட் அரங்கில் வீழ்த்த முடியாமல் போன லிவர்பூல், அக்குழுவின் அல்லயன்ஸ் அரினாவில் பலப் பரிட்சை நடத்தவுள்ளது.

இந்தப் பருவத்தின் தொடக்கத்தில் சற்றுத் தடுமாறிய பயர்ன் குழு அதிலிருந்து மீண்டு வீறுநடை போட்டு ஜெர்மானிய லீக்கில் முதல் நிலைக்கு முன்னே றியுள்ளது. கடந்த பருவ சாம்பியன்ஸ் லீக்கில் இறுதிப் போட்டி வரை லிவர்பூல் சென்றபோதும் நாளைய ஆட்டத்தில் பயர்ன் குழுவை வீழ்த்துவது என்பது கிட்டத்தட்ட கத்திமேல் நடப்பது போலத்தான். ஆயினும், வார இறுதியில் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் பர்ன்லி குழுவை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த நம்பிக்கையுடன் லிவர்பூல் ஆட்டக்காரர்கள் ஜெர் மனி சென்றுள்ளனர்.

அதே நேரத்தில், உல்ஃப்ஸ்பர்க் குழு விற்கு எதிராகத் தான் ஆடிய கடைசி ஆட்டத்தில் பயர்ன் குழுவும் கோல் மழை பொழிந்தது. நட்சத்திர வீரர் லெவண்டோவ்ஸ்கி இரு கோல்களை அடிக்க, அக் குழு 6-0 என்ற கணக்கில் எதிரணியை நசுக்கியது. அதனால்தான் பயர்னை வெல் வது அவ்வளவு எளிதல்ல என் கிறார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். “காலிறுதிச் சுற்றுக்குள் நுழை வதற்கு எங்களால் முடிந்தவரை உயிரைக்கொடுத்து விளையாடு வோம்,” என்றார் கிளோப்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது