ரியால் நிர்வாகியாக மீண்டும் ஸிடான்

காற்பந்துக் குழுவான ரியால் மட்ரிட்டின் நிர்வாகியாக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார் முன்னாள் ஜாம்பவான் ஸினடின் ஸிடான், 46 (படம்). கடந்த மூன்று பருவங்களிலும் தொடர்ச்சியாக ரியால் குழுவை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெல்ல வைத்த ஸிடான், 2018 மே மாதத்துடன் அக்குழுவின் நிர் வாகி பதவியைத் துறந்தார். இந்நிலையில், பத்து மாதங் களுக்குப் பிறகு ரியால் குழுவிற்கு திரும்பியுள்ள ஸிடான், “வீட்டிற்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி,” என்று தெரிவித்துள்ளார்.

ரியால் நிர்வாகியாகப் பதவி ஏற்ற ஐந்து மாதங்களிலேயே சான்டியாகோ சோலாரி நீக்கப்பட்ட நிலையில், ஸிடான் அப்பதவியில் மறுபடியும் அமர்த்தப்பட்டுள்ளார். வரும் 2022ஆம் ஆண்டு வரையில் நிர்வாகியாகச் செயல்பட ஸிடான் ஒப்புக்கொண்டுள்ளார். ஸ்பானிய லா லீகா பட்டியலில் இப்போது மூன்றாம் இடத்தில் இருக்கும் ரியால், முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவைவிட 12 புள்ளிகள் குறைவாகப் பெற்று உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கை வீரர் ஏஞ்சலோ பெரேராவின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெலுக்வாயோ. படம்: ஏஎஃப்பி

21 Mar 2019

சூப்பர் ஓவரில் வாகை சூடிய தென்னாப்பிரிக்கா