காற்பந்து: மூன்று கோல்கள் அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

சாம்பியன்ஸ் லீக் இறுதி எட்டு சுற்றில் நேற்று (மார்ச் 12) 'அத்லெடிகொ மட்ரிட்' அணிக்கு எதிராக மூன்று கோல்கள் போட்டார் உலகின் முன்னணி காற்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ.

முதல் கால் ஆட்டத்தில் இரண்டு கோல்களால் தொற்ற ஜுவேன்டஸ் அணி, ரொனால்டோவின் மூன்று கோல்களால் மொத்தம் 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் வென்று அந்தப் போட்டியின் காலிறுதி சுற்றுக்குத் தகுதிப் பெற்றது.

டுரினில் அமைந்திருக்கும் 'எலாயன்ஸ்' ஆரங்கத்தில் நடந்தேறிய ஆட்டத்தின் இரண்டு பாதிகளிலும் கோல் அடித்தார் ரொனால்டோ. ஆட்டம் முடிய நான்கு நிமிடங்கள் இருந்தபோது 'பனால்டி' ஒன்றை வெற்றிகரமாக எடுத்து 'ஹட் டிரிக்' சாதனையைப் படைத்தார் ரொனால்டோ.

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இது ரொனால்டோவின் எட்டாவது 'ஹட் டிரிக்'. பார்சலோனா ஆட்டக்காரரான லயனல் மெசியோடு இது அவரைச் சமநிலைக்குக் கொண்டு செல்கிறது.