சாதித்து வரும் ஆதிக்க நாயகன் 

டூரின்: சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் 2=-0 என வென்று முன்னிலையில் இருந்த போதும் இரண்டாவது ஆட்டத்தில் யுவென்டஸ் குழுவின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ திடலில் காட்டிய வித்தைகளுக்கு அட்லெட்டிகோ மட்ரிட் குழுவால் ஈடுகொடுக்க முடியாமல் போனது.
யுவென்டஸ் குழுவின் சொந்த அரங்கில் நேற்று அதிகாலை நடந்த காலிறுதிக்கு முந்திய சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் ரொனால்டோ ஹாட்ரிக் கோலடித்து 3-0 என்ற கணக்கில் அக்குழுவை வெற்றி பெறச் செய்தார். இதை அடுத்து, ஒட்டுமொத்த கோல் கணக்கிலும் அக்குழு 3=-2 என முன்னிலை பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
இப்பருவத்தின் தொடக்கத்தில் 99 மில்லியன் பவுண்டு விலை கொடுத்து ரியால் மட்ரிட் குழு விடம் இருந்து ரொனால்டோவைத் தன்பக்கம் இழுத்துக்கொண்டது யுவென்டஸ். ரொனால்டோவும் அவ்வளவு பெரிய விலைக்குத் தான் உரியவனே என நிரூபிக்கும் வகையில் மிகச் சிறப்பாக விளை யாடி வருகிறார்.
நடப்பு இத்தாலிய லீக்கில் இன்னும் 11 ஆட்டங்கள் எஞ்சி உள்ள நிலையில் இரண்டாம் நிலை யில் உள்ள நேப்போலி குழுவைவிட 18 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ள யுவென்டஸ் பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!