மான்செஸ்டர்: ஜெர்மனியின் ஷால்க காற்பந்துக் குழுவிற்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி குழு 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இவ்விரு குழுக்களுக்கு இடையிலான காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் சுற்று ஆட்டத்தில் கடைசி நேரத்தில் இரு கோல்களைப் போட்டதன் மூலம் சிட்டி 3=-2 என வென் றிருந்தது. இதையடுத்து, ஒட்டு மொத்த கோல் கணக்கிலும் 10-2 என பெரும் முன்னிலை பெற்று, சிட்டி மிக எளிதாக காலிறுதிக்குள் நுழைந்தது.
அக்குழுவின் நட்சத்திர ஆட் டக்காரரான அர்ஜெண்டினாவின் செர்ஜியோ அகுவேரோ இரண்டு கோல்களை அடித்தார். லிரோய் சானே, ரஹீம் ஸ்டெர்லிங், பெர்னாடோ சில்வா, ஃபில் ஃபோடன், கேப்ரியல் ஜேசுஸ் ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலைப் போட்டனர். ஆட்டத்தின் 78வது நிமிடத் தில் தான் அடித்த கோலால் சாம்பியன்ஸ் லீக்கில் ஆகக் குறைந்த வயதில் கோல் போட்ட சிட்டி ஆட்டக்காரர் என்ற பெரு மையைப் பெற்றார் 18 வயதும் 288 நாட்களும் பூர்த்தியடைந்த இங்கிலாந்தின் ஃபில் ஃபோடன்.

