சார்லி வைட்டிங் திடீர் மரணத்தால் எஃப்1 சமூகம் அதிர்ச்சி

பிரபல ‘ஃபொர்மியுல வன்’ (எஃப்1) கார் பந்தய இயக்குநரான திரு சார்லி வைட்டிங், ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் ‘கிராண்ட் ப்ரி’ பந்தயத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். 66 வயதாகும் அவர், அனைத்துலக தானுந்து சம்மேளனம் (எஃபைஏ) என்ற அமைப்பை வழிநடத்தி வந்தார்.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அவர் 1977ஆம் ஆண்டில் ‘ஹெஸ்கத்’ குழுவில் தன் வாழ்க்கைத்தொழிலைத் தொடங்கினார். 1997ஆம் ஆண்டிலிருந்து அவர் பந்தய இயக்குநராக இருந்து வருகிறார்.

இந்தச் செய்தி ‘ஃபொர்மியுல வன்’ ஏற்பாட்டாளர்களையும் கார் ஓட்டுநர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரு வைட்டிங் எஃப்1 ஓட்டுநர்களுடன் நெருக்கமானவர். எஃப்1 பந்தயம் தொடர்பான பல அம்சங்களில் வழிகாட்டுதலுக்கு அவரின் அறிவுரைகள் அதிகம் நாடப்பட்டன.    

இப்பகுதியில் மேலும் செய்திகள்