காலிறுதிச் சுற்றுக்கு நான்கு இங்கிலிஷ் குழுக்கள் தகுதி

மியூனிக்: சாம்பியன்ஸ் லீக் காற் பந்துப் போட்டியின் காலிறு திக்கு முந்தைய சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பயர்ன் மியூனிக் குழுவை 3-1 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் தோற் கடித்தது.
இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறியுள்ள நான்காவது இங்கிலிஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) குழு என்ற பெருமையை லிவர்பூல் பெற்றுள்ளது. ஏற்கெனவே டோட் டன்ஹம் ஹாட்ஸ்பர், மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி ஆகிய குழுக்கள் காலிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டன. இபிஎல்லில் விளையாடும் நான்கு முன்னணி குழுக்களும் சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முன்னேறியிருப்பது 10 ஆண்டுகளில் இதுவே முதன் முறை.
லிவர்பூலின் சொந்த அரங்கில் நடைபெற்ற இந்தச் சுற்றின் முதல் ஆட்டம் கோல் எதுவுமின்றி சம நிலையில் முடிந்தாலும் முதல் ஆட்டத்தில் விட்டதை இந்த ஆட்டத்தில் லிவர்பூல் சரிசெய்தது. பயர்ன் மியூனிக்கின் சொந்த அரங்கில் இந்த ஆட்டம் நடை பெற்றாலும் ஐந்து முறை ஐரோப்பிய வெற்றியாளரான லிவர்பூலே இதில் ஆதிக்கம் செலுத்தியது.
இதில் இரு கோல்களைப் போட்ட லிவர்பூலின் சடியோ மனே, குழுவின் வெற்றிக்கு வித்திட்டார். தற்காப்பு ஆட்டக்காரர் வெர்ஜில் வேன் டிக் மற்றொரு கோலைப் போட்டார்.
இந்த ஆட்டத்தில் ரசிகர்களின் பலம் தனக்கு சாதகமாக அமைந் தாலும் லிவர்பூல் அளித்த நெருக் குதலை பயர்னால் சமாளிக்க முடியவில்லை.
கடந்த ஏழு பருவங்கள் ஒவ்வொன்றிலும் சாம்பியன்ஸ் லீக்கில் குறைந்தது காலிறுதி வரையாவது பயர்ன் சென்றது. ஆனால் இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அதன் இரண்டாவது கோலைப் போடவும் பயர்னின் கனவு இம்முறை சிதைந்துவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!